கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் யூத திருமணம் நடந்தது, கேரளாவில் உள்ள யூத சமூகம் கொச்சியில் நடந்த இந்த பாரம்பரிய திருமணத்தை கொண்டாடியது. ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் ரிசார்ட்டில் இந்த பிரமாண்டமான விழா நடந்தது. இந்த விழாவில் ரேச்சல் பினோய் மலாக்கி மற்றும் ரிச்சர்ட் சச்சரி ரோவ் ஆகியோர் தங்கள் திருமண உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டதுடன், மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?
முன்னாள் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பினோய் மலகாயின் மகள் ரேச்சல், அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற ரிச்சர்டை திருமணம் செய்து கொண்டார். இந்த பாரம்பரிய யூத திருமணமானது இஸ்ரேலில் இருந்து வந்த ஒரு ரபியால் நடத்தப்பட்டது. இதில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் இந்திய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களின் ஒற்றுமைக்கு ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கியது.
யூத நகரத்திற்கும் யூத பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற மட்டஞ்சேரியில் உள்ள ஜெப ஆலயத்தை தவிர வேறு எங்கும் யூத திருமணம் நடைபெறாது என்று கூறப்படுகிறது. எனவே இந்த யூதர்களின் திருமணம் தனித்துவமான நிகழ்வை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது..
ரேச்சல் மலாக்காய் அமெரிக்காவில் தரவு விஞ்ஞானியாகவும், ரிச்சர்ட் நாசாவில் பொறியாளராகவும் பணிபுரிகிறார். கேரளாவில் இது போன்ற விழாக்கள் அரிதாக நடப்பதால் இவர்களது திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநிலத்தில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு யூத திருமணம் நடந்தது.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, யூதர்கள் முதன்முதலில் கேரளாவிற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சாலமன் மன்னரின் ஆட்சியின் போது முதன்மையாக வணிகர்களாக வந்தனர். தற்போது கேரளாவில் சில யூத குடும்பங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சேரியில் இருந்து வந்த இளவரசி.. ஆடம்பர அழகு நிறுவனத்தின் மாடலாக மாறிய 14 வயது சிறுமி..