மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்குத் தீ வைப்பு... மே 26 வரை இன்டர்நெட் சேவை முடக்கம்

By SG BalanFirst Published May 22, 2023, 6:38 PM IST
Highlights

மே 3ஆம் தேதி கலவரத்துக்குப் பின் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று மணிப்பூரில் இருந்து புதிய வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இம்பாலில் கைவிடப்பட்ட வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததால், மாநில தலைநகரின் நியூ லாம்புலேன் பகுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் வடகிழக்கு மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில், பெரும்பான்மையான மெய்தி சமூகம் மற்றும் குக்கி பழங்குடி சமூகம் இணையே மீண்டும் வன்முறை மூண்டது. இதனால் வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என காவல்துறையினர் கூறுகின்றனர்.

இம்பாலின் சாசாத் அவென்யூவில் உள்ள ஐசிஐ தேவாலயம் வன்முறை கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தேவாலயம் மெய்தி கும்பல்களால் எரிக்கப்பட்டது என குக்கி மாணவர் அமைப்பின் டெல்லி பிரிவு குற்றம்சாட்டுகிறது.

பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?

இந்த மாத தொடக்கத்தில், மெய்தி சமூகத்தினரின் பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக குக்கி பழங்குடியினர் மே 3 அன்று ஒற்றுமை அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர். அந்தப் பேரணியின்போது இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. ஒரு வாரமாக நீடித்த வன்முறையில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் எரிக்கப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் ராணுவமும் துணை ராணுவமும் மணிப்பூருக்கு வரவழைக்கப்பட்ட பின் வன்முறை கட்டுக்குள் வந்தது.

இப்போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் மணிப்பூர் மாநிலத்தில் மாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய வன்முறைகளுக்கு மத்தியில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) வரை மாநிலம் முழுவதும் இணையம் சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சில சமூகவிரோதிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறை சம்பவங்களின் படங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சு செய்திகளை பொதுமக்களிடம் பரப்பக்கூடும் எனவும் சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதுகாக்க இன்டர்நெட் சேவை முடக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Mount Etna Eruption: இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா! எரிமலை வெடிப்பால் விமானங்கள் ரத்து

குக்கி பழங்குடியினரை மணிப்பூரில் உள்ள காப்புக் காடுகளில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தால் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மெய்திகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியதன் எதிரொலியாக போராட்டங்கள் வலுத்து மோதல்களுக்கு வழிவகுத்தன.

மாநிலத்தின் மக்கள்தொகையில் மெய்தி மக்கள் 64 சதவீதம் இருந்தாலும், மலைப்பகுதியில் உள்ள காப்புக் காடுகளில் அவர்கள் நிலம் வாங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்படுவதால் அவர்கள் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும். இது ஏற்கெனவே மலைப்பகுதிகளில் வசித்துவரும் குக்கி உள்ளிட்ட பழங்குடியினரைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான மாநில பாஜக அரசு தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் இருந்தும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது எனவும் திட்டமிட்டு தங்களைக் குறிவைத்து செயல்படுவதாகவும் குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

முதியோருக்கான 5 வருட ஆர்.டி.க்கு 10% வட்டி வழங்கும் வங்கி!

click me!