தவறுதலாக எண்ணெய்யை குடித்த 2 வயது குழந்தை.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Published : May 22, 2023, 04:14 PM ISTUpdated : May 22, 2023, 04:20 PM IST
தவறுதலாக எண்ணெய்யை குடித்த 2 வயது குழந்தை.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சுருக்கம்

கர்நாடகாவில் ட்ர்பண்டைன் எண்ணெய்யை தவறுதலாக குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் நீலமங்களா என்ற இடத்தில் ஜமீர் என்ற வசித்து வருகிறார். அவர் செம்மறி ஆடுகளை விற்று வருகிறார். இவருக்கு அன்ஜம் ஃபாத்திமா என்ற 2 வயது மகள் உள்ளார். இந்நிலையில் தனது செம்மறி ஆடுகளை குறிப்பதற்காக அவர் தனது வீட்டில் டர்பண்டைன் ஆயிலை வாங்கி வைத்துள்ளார். இந்த டர்பண்டைன் ஆயில் வார்னிஷ் மற்றும் பெயிண்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சூழலில் ஜமீரின் குழந்தை விளையாடும் போது அந்த ஆயில் பாட்டில் கீழே விழுந்துள்ளது. அதில் இருந்த எண்ணெய் கீழே சிதறி உள்ளது. குழந்தை அந்த எண்ணெய்யை வாயில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்திலேயே குழந்தை வாந்தி எடுத்துள்ளது. மேலும் அடுத்த சில நிமிடங்களில் குழந்தை மயக்க நிலைக்கு சென்றது.

இதையும் படிங்க : இந்தியா - பசிபிக் தீவுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த உணவுகள் - இதை கவனிச்சீங்களா?

இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!