Uttar Pradesh Boat Accident: உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு; 40 பேரின் கதி என்ன?

Published : May 22, 2023, 12:20 PM ISTUpdated : May 22, 2023, 01:00 PM IST
Uttar Pradesh Boat Accident: உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு; 40 பேரின் கதி என்ன?

சுருக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

பாலியாவில் படகில் 40 பேர் பயணம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 

உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தின் மால்தேபூர் பகுதிக்கு அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 24 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. 

முதல் கட்ட தகவலின் அடிப்படையில், படகில் சுமார் 40 முதல் 50 பேர் பயணித்து இருப்பதாகத் தெரிகிறது. நான்கு பெண்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் படகு வீரர்கள் உதவியுடன் அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாலியாவில்  உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, பாலியா மாவட்டக் கலெக்டர் ரவீந்திர குமார் கூறுகையில், ''இதுவரை 4 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது'' என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் படகு கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். மக்கள் உள்ளூர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!