
இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை, வருண் காந்தியிடம் இருந்து சிலர் பெற்றுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது. பாதுகாப்பு ரகசியங்களைப் பெறுவதற்காக, வருண் காந்தியுடன், விபசார அழகிகளை பழகவிட்டு, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள், வீடியோக்களை வைத்து அவரை மிரட்டி ரகசியங்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க வழக்கறிஞர் எட்மாண்ட்ஸ் ஆலன் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை வருண் காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். அவை பொய்யான குற்றச்சாட்டு என்றும், இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவீதமாவது நிரூபித்துவிட்டால், நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்றும் வருண் காந்தி சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், வருண் காந்தியின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்புக்குள்ளாகி வருகிறது.