சித்தப்பாவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கினார் அகிலேஷ் - முற்றுகிறது மோதல்...!!!

 
Published : Oct 24, 2016, 06:56 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
சித்தப்பாவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கினார் அகிலேஷ் - முற்றுகிறது மோதல்...!!!

சுருக்கம்

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 

முலாயம் சிங்கின் சகோதரரும், தனது சித்தப்பாவுமான சிவபால் சிங், ஓ.பி. சிங் உள்ளிட்ட 4 பேரை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

இந்நிலையில், முலாயம் சிங்கின் சகோதரர் சிவபாலுக்கும், அகிலேஷுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்தது. சிவபாலின் ஆதரவாளர்களை அகிலேஷ் ஓரங்கட்டியதுடன் அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் சிவபாலை நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முலாயம் சிங், தனது சகோதரருக்கு ஆதரவாக செயல்பட்டார். கட்சியின் மாநில தலைவர் பதவியை சிவபாலுக்கு வழங்கினார்.

முலாயம் சிங்கின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் சிவபாலுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் அகிலேஷ், சிவபால் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்தது. இந்நிலையில், முதல்வர் அகிலேஷ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று காலை கூட்டினார். கூட்டத்தில் சித்தப்பா சிவபால் சிங், ஓம்பிரகாஷ் சிங் உள்ளிட்ட 4 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அகிலேஷ் அறிவித்தார்.

அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த சிவபால் யாதவ் மீண்டும் நீக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தனது சகோதரர் முலாயம் சிங்கை சந்தித்து சிவபால் ஆலோசனை நடத்தினார். உத்திரபிரதேசத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!