
பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போத் நேற்று இரவு நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மேடையிலேயே கீழே விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44.
நேற்றிரவு புனேவில் நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வினி அபாரமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மேடையில் சரிந்து விழுந்ததாகவும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே அவருடைய உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பரத நாட்டியத்தை உயிருக்கு நிகராக மதித்து வாழ்ந்து வந்த அஸ்வினி பரத நாட்டிய நிகழ்ச்சியின்போதே உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.