முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அமெரிக்காவில் உள்ளது போல, நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்க தயாராகி வருகிறது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. உத்தரபிரதேச அரசு கூற்றுப்படி, ‘சிங்கிள் என்ட்ரி, மல்டிபிள் எக்சிட்' என்ற எண்ணத்தில் கல்வி நகரங்கள் உருவாக்கப்படும். இந்த நடவடிக்கை இளைஞர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதோடு, ஒரே இடத்தில் பலவிதமான தொழில்முறை திறன்களுடன் அவர்களை தயார்படுத்த முடியும்.
இது தவிர, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்குமிடம் மற்றும் பல வசதிகளை வழங்கும். உத்தரபிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்காக டெலாய்ட் இந்தியாவின் ஆலோசனை நிறுவன பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பு நடந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநிலத்தில் தரமான கல்வியை மேம்படுத்த, அமெரிக்காவில் உள்ளது போல, நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்க தயாராகி வருகிறது. உ.பி.யில் நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாடு மற்றும் உலகின் மதிப்புமிக்க அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை டவுன்ஷிப்பில் திறக்க முடியும்.
அதே இடத்தில் அடல் ரெசிடென்ஷியல் பள்ளிகள் போன்ற ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருக்கும். மேலாண்மை, தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நிறுவப்படும். இந்த கல்வி நகரத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகங்களும் இடம்பெறும். அங்கு இளைஞர்களுக்கு பல்வேறு வகையான திறன்களில் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு..மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !
தவிர, நாடு மற்றும் மாநிலம் முழுவதும் நடைபெறும் நீட், ஐஐடி, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் வெற்றிபெறும் வகையில், அபியுதயா போன்ற பல பயிற்சி நிறுவனங்கள் இந்தக் கல்வி நகரங்களில் தொடங்கப்படும். கல்வி நகரத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் தங்குமிடங்கள் வழங்கப்படும். மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிங்கிள் என்ட்ரி, மல்டிபிள் எக்சிட்' முறையால், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்விக் கடன் பெற முடியும்’ என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி