ராமர் சேது பாலம் தேசிய நினைவுச் சின்னம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த பதில் இதுதான்!!

By Dhanalakshmi GFirst Published Aug 22, 2022, 2:50 PM IST
Highlights

ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்

தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேஸ்வரத்தை இலங்கையின் வடமேற்கு கடற்கரையான மன்னார் தீவுடன் இணைக்கும் பாலம் தான் ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாம் பாலம். இது முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கற்களினால் அமைக்கப்பட்டது. இது ஒரு சங்கிலி தொடர் போல நீண்டு காணப்படும்.

இந்து புராணம் ராமாயணத்தில் உள்ள குறிப்புகளின்படி, ராவணனுடன் போரிடுவதற்காக ராமர் இலங்கைக்கு செல்லும் போது அவரது படையால் இந்த பாலம் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுவதுஉண்டு. ராமர் சேது பாலம் 48 கிமீ தொலைவில், மன்னார் வளைகுடாவை (தென்மேற்கு) பால்க் ஜலசந்தியிலிருந்து (வடகிழக்கில்) பிரிக்கிறது. சில பகுதிகள் வறண்டவை, மேலும் அப்பகுதியில் உள்ள கடல் 1 மீட்டர் ஆழத்தில் மட்டுமே அமைந்துள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து இந்த இடத்தில் சாத்தியம் இல்லாததாக இருக்கிறது. 

rahul: ராகுல் காந்தி தமிழகத்தில் யாத்திரை: ஸ்ரீபெரும்பதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு செப்டம்பர் 7ல் வருகை

இதுதொடர்பான வாக்குவாதம் இன்று நிகழ்ந்தது. சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராகி வாதிட்டார்.
நீதிபதி சந்திரசூட், ''டாக்டர் சுவாமி தாக்கல் செய்து இருக்கும் மனு மிகவும் விரிவாக இருக்கிறது. தற்போது இதை எடுத்துக் கொள்ள முடியாது. மற்றொரு நாள் எடுத்துக் கொள்ளலாம்'' என்றார்.

ஆனால், இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, ''இது சுலபமானது. ஐந்து நிமிடத்தில் நான் இங்கு விளக்கி விடுகிறேன். பிரச்சனையே இங்கு கட்டமைப்புகள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதுதான்'' என்றார்.

மீண்டும் வாக்குவாதத்தை தொடர்ந்த நீதிபதி, '' இது கொள்கை முடிவு, மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுக்கட்டுமே?'' என்றார்.

சுவாமி வாதிடுகையில், ''கொள்கை இருக்கிறது. குறிப்பிட்ட தேதியில் முடிவு எடுக்கப்படும் என்பதை அவர்கள் சொல்லட்டுமே'' என்று வாதிட்டார்.

''முடிவு எடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை'' என்று நீதிபதி பதில் அளிக்க, ''மத்திய அரசு எனது மனுவுக்கு எதிர் மனு தாக்கல் செய்யட்டும்'' என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். 

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல், ''நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை'' என்றார்.

நீதிபதி: நாங்கள் கேட்போம் 

சுவாமி: இதை நீக்க வேண்டாம்
 
நீதிபதி: நீதிமன்றத்தின் அனைத்து தகவல்களும் சுவாமிக்கு தெரியும் 

இவ்வாறாக இன்றைய வாக்குவாதம் முடிந்துள்ளது.

rahul: narendra modi: குஜராத்தில் போதை மருந்து தொழில் எளிதாகச் செய்யலாம்: பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

click me!