குஜராத்தில் இருந்து ஏராளமாக போதை மருந்து கடத்தப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் இருந்து ஏராளமாக போதை மருந்து கடத்தப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை போலீஸாரின் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் சமீபத்தில் குஜராத்தில் மெபட்ரோன் போதை மருந்து தயாரி்க்கும் நிறுவனத்தை கண்டுபிடித்து அங்குள்ள மருந்தை பறிமுதல் செய்தனர். இந்த மருந்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,026 கோடியாகும்.
தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
இந்த செய்திக்கு எதிர்வினையாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ குஜராத்தில் எளிதாக போதை மருந்து தொழில் செய்யலாம். திரு பிரதமர் அவர்களே, இந்த கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். குஜராத்துக்கு ரூ.ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை மருந்து வந்துள்ளது. மகாத்மா காந்தியின் புனிதமான பூமியில் யார் விஷத்தை பரப்புகிறார்கள்.
இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா ? இறக்குமதிக்கு வாய்ப்பே இல்லை - மத்திய உணவுத்துறை அதிரடி விளக்கம்.!
அடிக்கடி துறைமுகத்திலிருந்து போதை மருந்து கைப்பற்றப்படுகிறது ஆனால் இதுவரை துறைமுகத்தின் உரிமையாளரை ஏன் கேள்விகேட்கவில்லை. என்சிபி மற்றும் அரசு அமைப்புகளால் குஜாராத்தில் செயல்படும் பல்வேறு போதை மருந்துதயாரிப்பு நிறுவனங்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. நர்கோஸ் என்பது கொலம்பியாவில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களின் நெட்ஃபிக்ஸ் தொடரின் தலைப்பு.
பிரதமர் மோடிக்கு நெருக்கடி: டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
மத்தியில் யார் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள்தான் குஜராத்திலும் போதை மாஃபியா கும்பலுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். திரு பிரதமர் மோடி அவர்களே, எத்தனை நாட்களுக்கு இன்னும் மவுனமாக இருப்பீர்கள். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.