delhi farmers protest: பிரதமர் மோடிக்கு நெருக்கடி: டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்

By Pothy Raj  |  First Published Aug 22, 2022, 11:43 AM IST

விவசாயிகளின் அமைப்பான கிசான் மோர்ச்சா அழைப்பின் பெயரில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மகாபஞ்சாயத் கூட்டத்தில் பங்கேற்க நூற்றுக்கணக்கிலான விவசாயிகள் டெல்லியை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.


விவசாயிகளின் அமைப்பான கிசான் மோர்ச்சா அழைப்பின் பெயரில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மகாபஞ்சாயத் கூட்டத்தில் பங்கேற்க நூற்றுக்கணக்கிலான விவசாயிகள் டெல்லியை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓர் ஆண்டாக டெல்லியில் புறநகர்ப் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியையும், சர்வதேச அளவில் கவனத்தையும் ஈர்த்தது. இப்போது டெல்லியின் மையப் பகுதியான ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கூடுவது மத்திய அரசுக்கு அழுதத்ததை அதிகரிக்கும்.

Tap to resize

Latest Videos

ஆம் ஆத்மியில் வெளியேறினால் வழக்குகள் வாபஸ்; பாஜக மீது மணீஷ் சிசோடியா அதிரடி குற்றச்சாட்டு!!

ஆனால், டெல்லி நோக்கி கார்களிலும், டிராக்டர்களிலும், நடைபயணமாக வரும் விவசாயிகளை ஜந்தர் மந்தர் செல்லவிடாமல், போலீஸார் வழியியிலே தடுத்து நிறுத்துவதாக விவசாயிகள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

விவசாயிகள் நடத்தும் இந்த மகாபஞ்சாயத்து ஒருநாள் மட்டுமே நடக்கும். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர்மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நினைவுபடுத்தும் விதத்தில் அடையாளமாக போராட்டம் நடத்தப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா ? இறக்குமதிக்கு வாய்ப்பே இல்லை - மத்திய உணவுத்துறை அதிரடி விளக்கம்.!

குறிப்பாக விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்ட அங்கீகாரம் அளிப்பது, மின்சாரச்சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்வது போன்றவை விவசாயிகள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகளாகும்.

ஆனால், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு இதுவரை போலீஸார் அனுமதியளிக்கவில்லை. 

எஸ்கேயு அமைப்பின் உறுப்பினர் அபிமன்பு கோக்கர் கூறுகையில் “ பஞ்சாப், உ.பி. ஆகிய மாநிலங்களில் இருந்து மகாபஞ்சாயத்துக்கு வரும் விவசாயிகளை போலீஸார் வழியேலேயே தடுத்துவிட்டார்கள். அவர்களை குருதுவாரா சாஹேப், ராகாப்கஞ்ச், மோதி பாக் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று அவர்களை அனுப்பிவிட்டார்கள். 

இதற்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது எங்கள் கோரி்க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” எனத் தெரிவி்த்தார்

பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !

டெல்லிக்குள் வரும் காஜிப்பூர் எல்லை, சிங்கூ எல்லையில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் டெல்லியில் மையப்பகுதியான ஜந்தர் மந்தர் பகுதியிலும் விவசாயிகள் வருவை அதிகரித்திருப்பதால், அங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமான சோதனைக்குப்பின்பே போலீஸார் அனுமதிக்கிறார்கள். இதனால் காஜிப்பூர் எல்லையில் நீண்ட எண்ணிக்கையி் வாகனங்கள் அணிவகுத்து நிற்க்கின்றன. சிங்கு எல்லையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெதுவாக நகர்கின்றன. 

கணவனை இழந்து தனிமையில் வாடிய தாய்... மாப்பிள்ளை பார்த்து 2வது திருமணம் செய்து வைத்த மகள்.

விவாயிகள் போராட்டத்தையடுத்து, டெல்லி எல்லைகளான சிங்கூ, காஜிப்பூர் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திக்ரி எல்லை, ரயில்வே இருப்புப்பாதை, மெட்ரோ ஸ்டேஷன்களில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 

click me!