எதிர்பாராத விதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி பின்புறத்தில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
டெல்லியில் இருந்து ஹரித்தூவருக்கு 6 பேர் காரில் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி பின்புறத்தில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த விபத்தில் ஷிவம், பர்ஷ், குணால், தீரஜ், விஷால் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உருக்குலைந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க;- அணில் சேமியாவில் இறந்து கிடந்த தவளை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!