நாடு முழவதும் உரங்களுக்கான பிராண்டுகளில் ஒரேமாதிரித் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேளாண் இடு பொருட்களை “பாரத்” என்ற ஒற்றைப் பெயரில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழவதும் உரங்களுக்கான பிராண்டுகளில் ஒரேமாதிரித் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேளாண் இடு பொருட்களை “பாரத்” என்ற ஒற்றைப் பெயரில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி அனைத்து உரப் பைகளிலிலும் அது டிஏபி(DAP) அல்லது எம்ஓபி அல்லது என்பிகே எந்த உரமாக இருந்தாலும், பாரத்யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி , பாரத் என்பிகே என்று குறிப்பிட வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் பாரத் என்ற பெயரில் கொண்டு வர வேண்டும்.
‘என் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவிடம் ரூ.800 கோடி எப்படி வந்தது?’ கெஜ்ரிவால் கேள்வி
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தனியார் உர நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்துள்ளன. இத்தனை ஆண்டுகளாக தாங்கள் உருவாக்கி வைத்திருந்த பிராண்டுகளை கொலை செய்துவிட்டு, பாரத் என்ற பெயரை சூட்ட வேண்டும். சந்தையில் வேறுபடுத்திக்காட்டத்தான் நாங்கள் எங்களின் பிராண்ட்டை வைத்திருந்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பாரத் என்ற பெயரும், பிரதான் மந்திரி பாரதிய ஜனுவராக் பாரியோஜனா(பிஎம்பிஜேபி) என்றதிட்டத்தின் அடையாளமும், எந்த மானியத்தின் கீழ் உரம் வழங்கப்படுகிறது என்ற பெயரும் உரத்தின் பையில் இடம் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Pegasus Case: பெகாசஸ் வழக்கு: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை:விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
இது குறித்து உர நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில் “ ஏற்கெனவே உர நிறுவனங்கள் களப்பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. விவசாயிகளுக்கு செயல்விளக்கம், சர்வே, பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. எங்களின் பிராண்ட் பெயர் தெரிந்தால்தான் அது மக்களிடம் சென்று சேரும். இனிமேல் ஒரே நாடு ஒரே உரம் வந்துவிட்டால், அனைத்தும் நின்றுவிடும். எங்கள் நிறுவனத்தின் பெயரே சிறிய அளவில்தான் இருக்கும் ” எனத் தெரிவித்தார்
ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மிஸ்ஸிங்; அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்; பாஜகவின் கை வரிசையா?
மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே உரம் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சுயவிளம்பரத்துக்காக சர்வவியாபி செய்யும் எந்தச் செயலும் நம்மை ஆச்சர்யப்படுத்தாது. சமீபத்திய முடிவான அனைத்து உரங்களும் ஒரே பிராண்டின் கீழ் வருவது, ‘பிஎம்-பிஜேபி’அதாவது பிரதான் மந்திரி பாரதிய ஜனுவராக் பாரியோஜனா(பிஎம்பிஜேபி) திட்டத்தின் பகுதிதான்
ஒருதேசம், ஒரு மனிதர், ஒரே உரம்! “ எனத் தெரிவித்துள்ளார்