உள்நாட்டு போர் நடைபெறும் சூடான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்களும் ஒரு கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போர் நடைபெறும் சூடான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்களும் ஒரு கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடானில் அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கின்றன. இந்தியாவும் சூடானில் உள்ள சுமார் 4000 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முயற்சி எடுத்துவருகிறது.
undefined
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-130J விமானங்கள் தற்போது சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் தயார் நிலையில் உள்ளன. மேலும், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா (INS Sumedha) கப்பலும் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
"சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சூடானில் சிக்கிவரும் பாதுகாப்பு நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சூடானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம்" என வெளியுறவுத்துறை கூறுகிறது.
Situation in Sudan
Press Release ➡️ https://t.co/0qLd7zcQLG pic.twitter.com/T9ITIEeYqV
பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டம்: நாளை ம.பி. செல்கிறார் பிரதமர் மோடி
சூடான் அதிகாரிகளைத் தவிர, சூடானில் உள்ள இந்தியத் தூதரகம், ஐ.நா. சபை, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளுடனும் வெளியுறவுத்துறை தொடர்ந்து தொடர்பில் உள்ளது. சனிக்கிழமை, சவுதி அரேபியா சூடானில் இருந்து சுமார் 150 பேரை தங்கள் நாட்டுக்கு மீட்டு வந்தது. அவர்களில் 91 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்ற 66 பேர் வெளிநாட்டினர். அவர்களில் சிலர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் சவுதி அரேபிய கடற்படை கப்பல் மூலம் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
"கார்ட்டூமில் பல்வேறு இடங்களில் கடுமையான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. போரை முன்னிட்டு தற்போது அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் சூடான் வான்வெளி மூடப்பட்டுள்ளது. தரையிறங்கும்போது அபாயம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது" என வெளியுறவு அமைச்சகம் சொல்கிறது.
"சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதுகாப்பாக இருப்பது மற்றும் தேவையற்ற நடமாட்டத்தைக் குறைத்து ஆபத்தைத் தவிர்ப்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. கார்டூம் நகரத்தில் உள்ள இந்தியர்கள் வெளியேற சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம்" என்றும் வெளியுறவுத்துறை தெரிவிக்கிறது.
கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பு: ஐ.நா. காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை