திருநங்கைகளுக்கான முதல் பள்ளி….கேரளாவில் தொடக்கம்….

First Published Jan 5, 2017, 6:21 AM IST
Highlights


திருநங்கைகளுக்கான முதல் பள்ளி….கேரளாவில் தொடக்கம்….

திருநங்கைகள் சமூகத்தில் பல கருத்துக்களுக்கும், வெறுப்பிற்கும் ஆளாவதன் விளைவாக, எண்ணிக்கையில் சுமார் பாதியளவு திருநங்கைகள் தங்கள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் களையும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக "சஹாஜ்" என்ற திருநங்கைகளுக்கான சர்வதேச பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. 25லிருந்து 50 வயதுடைய 10 பேருக்கு அந்த பள்ளியில் இடம் வழங்கப்படவிருக்கிறது.

இப்பள்ளியில் சேரும் திருநங்கைகள்  10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்காக தயார்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக 15 லிருந்து 16 வயதினர் 10 ஆம் வகுப்பிற்கும், 17 முதல் 18 வயதுடையவர்கள் 12 வகுப்பு பயிலவும் க்ஷறபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளியின் முதல்வரான திருநங்கை ஆர்வலர் விஜயராஜா மல்லிகா, திருநங்கைகள் சமூகத்தில் நல்லதொரு பணிகளை பெறவும் மரியாதையுடன் வாழவும் அவர்களை இப்பள்ளி தயார்படுத்தும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த பள்ளியில் பயில்வதற்கு இதுவரை வந்த 14 விண்ணப்பங்களில் 6 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்  அனைவரும் ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்கள். பத்து இடங்களில் ஒன்று பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்களுக்கும் மேலும் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் புறக்கணிப்பிற்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்த முதல் இந்திய மாநிலமான கேரளாவில் இந்த பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

அந்த கொள்கையின் படி திருநங்கைகளுக்கு சிறப்பு கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை வழங்கப்படும்.

மாணவர்களுக்கான உணவு, தங்கும் வசதி மற்றும் படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொள்ளும் நபர்களை ஏற்பாடு செய்திருப்பதாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவித்துள்ளனர்.

click me!