
ரெயிலில் அதிகமான பயணிகள் பயணிக்க வேண்டும் என்பதற்காக ஆர்.ஏ.சி. படுக்கை வசதி அனைத்து ரெயில்களிலும் உயர்த்த ரெயில்வேநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முறை 2017ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்களில் ஆர்.ஏ.சி. படுக்கைகளின் எண்ணிக்கை மறு ஆய்வு செய்யப்பட்ட இருக்கிறது. இதன் மூலம் இனி வரும் மாதங்களில் அதிகமான பயணிகளில் ரெயிலில் பயணம் செய்ய முடியும்'' எனத் தெரிவித்தார்.
தற்போது, சாதாரன படுக்கை வசதி உள்ள பெட்டிகளில் ஆர்.ஏ.சி. படுக்கை 5 ஒதுக்கப்பட்டு வருகின்றன. இனி அந்த படுக்கைகள் ஒதுக்கீடு 7 ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம், ஆர்.ஏ.சி.ஒதுக்கீடு என்பது தற்போது 10 பேர் இருந்த நிலையில், இனி 14 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, ஆர்.ஏ.சி. பிரிவில் 7 பேருக்கு படுக்கை வசதியும், மீதமுள்ள 7 பேருக்கு இருக்கை வசதியும் இனி கிடைக்கும்.
3 டயர் ஏ.சி. பெட்டிகளில் இப்போது ஆர்.ஏ.சி.யில் 2 படுக்கைகளை ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இனி 4 ஆக உயர்த்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 4 பேர் ஒதுக்கீடு என்பது, 8 ஆக உயர்கிறது. 4 பேருக்கு படுக்கை வசதியும், 4 பேருக்கு இருக்கை வசதியும் கிடைக்கும்.
2 டயர் ஏ.சி. பெட்டிகளில் 2 பேருக்கு ஆர்.சி.ஏ. பிரிவில் படுக்கை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இனி 3 ஆக உயர்த்தப்படும். ஒட்டுமொத்தமாக 4 பேரில் இருந்து, 6 பேருக்கு இடம் ஒதுக்கப்படும். இதில் 3 பேருக்கு படுக்கையும், 3 பேருக்கு இருக்கையும் கிடைக்கும்