சட்டப் பேரவையில் ஓடி விளையாடிய எம்எல்ஏ…கை கொட்டி சிரித்த உறுப்பினர்கள்

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சட்டப் பேரவையில் ஓடி விளையாடிய எம்எல்ஏ…கை கொட்டி சிரித்த உறுப்பினர்கள்

சுருக்கம்

சட்டப் பேரவையில் ஓடி விளையாடிய எம்எல்ஏ…சிரிப்பூட்டும் சம்பவம்…

திரிபுரா சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் செங்கோலை பறித்துக்‍ கொண்டு ஓடிய காட்சி காண்போரை அதிர்ச்சிக்‍குள்ளாக்‍கியது.

திரிபுரா மாநில சட்டமன்றத்தில் அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்  சுதீப் ராய் பர்மன், உள்ளூர் நாளிதழில் வந்த செய்தி குறித்த ​பிரச்சினையை எழுப்பியபோது அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது அமளியின் ஊடே சபாநாயகர் மேஜை மீது இருந்த செங்கோலை எடுத்துக் கொண்டு பர்மன், வாயிலை நோக்‍கி ஓடியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவைக்‍காவலர்கள் அவரை பிடித்து செங்கோலை மீட்டனர்.

 பின்னர் அவை இரண்டு மணி நேரம் ஒத்திவைக்‍கப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வின் இச்செயலுக்‍கு, சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இன்றே கடைசி நாள்..! மக்களே இந்தப்பணிகளை முடிக்கவில்லை என்றால் சேதாரம் நிச்சயம்..!
நீங்க இதை பார்த்ததில்லையே.? சிக்கன் நெக் மிரட்டலுக்கு நாகாலாந்து அமைச்சர் விடுத்த வார்னிங்