
ஒரு டிடிவி ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார். நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்டகால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம். இன்று மீண்டும் இணைந்து விட்டோம். - டிடிவி தினகரன் பேட்டி!
டிடிவி தினகரன் பேட்டி!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று வரும் 26 ஆம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் மத்திய அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
பாஜக அரசின் 9 ஆண்டுகள் நிறைவு
நேற்றைய டாப் 10 முக்கிய செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ள நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் உட்பட 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை என்வபர், சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் என்றும், கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமாவாசைக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு என்றும் தெரிவித்துள்ளார்.
கள்ள சாராய விவகாரம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேசிய திருமாவளவன், மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம் - திருமாவளவன் பேட்டி
நேற்றைய டாப் 10 முக்கிய செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
மரக்காணத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம். உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும்போது துயரத்தை தாங்காமல் இருக்க முடியவில்லை. கள்ளச்சாரயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாரயம் தயாரிப்பவர்கள் உடம்பிற்கு கேடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தமிழிசை
மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல என்றும் அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும் காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
விற்கப்பட்டது கள்ள சாராயம் அல்ல - சைலேந்திரபாபு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க, சீயான் விக்ரமுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், திரையுலகினரை பிரமிக்க வைத்துள்ளது.
ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்
இந்த ஆண்டு பிரான்சில், உள்ள கேன்ஸ் திரைப்பட விழா, மே 27 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தலைமையில், இந்தியக் குழு நேற்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர். தமிழ்ப் பாரம்பரிய உடையான பட்டு ‘வேஷ்டி’ அணிந்து, தேசிய கோடி பதித்த உடையில்... அங்கவஸ்திரத்துடன் தென்னிந்திய மற்றும் தமிழகத்தின் கலாசாரத்தை எல். முருகன் வெளிப்படுத்தியுள்ளார்.
ரெட்கார்பெட்டில் பட்டு வேஷ்டியில் எல்.முருகன்