9 ஆண்டுகளை நிறைவு செய்யும் பாஜக அரசு... சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஏற்பாடுகள் தீவிரம்!!

Published : May 17, 2023, 12:09 AM IST
9 ஆண்டுகளை நிறைவு செய்யும் பாஜக அரசு... சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஏற்பாடுகள் தீவிரம்!!

சுருக்கம்

மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று வரும் 26 ஆம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: பறக்க முடியாமல் ஓடுதளத்தில் சிக்கிய விமானப்படை விமானம்! லே விமானங்கள் அனைத்தும் ரத்து

இதனால் மத்திய அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய மற்றும் மாநில அளவில் 9 ஆண்டு சாதனை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியான விசேஷ சங்க்ஷா அபியான் என்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதையும் படிங்க: 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி; 5000 அமெரிக்கவாழ் இந்தியர்கள் முன் பேசுகிறார்

கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆளுங்கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க 3 வகையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாஜக மூத்த தலைவர்களின் 51 பேரணிகள், 396 மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படுகின்றன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!