bose:netaji: டெல்லி இந்தியா கேட்டில் 28 அடியில் நேதாஜி சிலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

Published : Sep 08, 2022, 07:56 AM IST
bose:netaji: டெல்லி இந்தியா கேட்டில் 28 அடியில் நேதாஜி சிலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

சுருக்கம்

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 

கறுப்பு நிற கிரணைட் கல்லில் செதுக்கப்பட்ட நேதாஜி சிலை 28 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் மத்திய விஸ்தா திட்டம்: வரும் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

கடந்த ஜனவரி 23ம் தேதி நேதாஜியின் 125வது பிறந்ததினத்தின் நினைவாக இதே இடத்தில்தான் நேதாஜியின் சிலை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “ 280மெட்ரிக்டன் எடைஅளவில் 28அடி உயரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. 26ஆயிரம் மணிநேரம் கடின உழைப்புக்குப்பின் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை முற்றிலும் கைகளால் செதுக்கப்பட்டவை. சிற்பி அருண் யோகிராஜ் தலைமையிலான குழுவினர் இந்த சிலையைச் செய்தனர்

csif: airports: விமானநிலைய பாதுகாப்பு தனியார் வசம் செல்கிறது! 3,000 சிஎஸ்ஐஎப் பணியிடங்கள் நீக்கம்

28 அடி உயர நேதாஜி சிலை இந்தியாவில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்று, தத்தூரமானது, கைகளால் செதுக்கப்பட்டது. ஜனவரி 21ம் தேதி பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி இநதியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

amit shah: bjp: இந்த முறை 144 எங்களுக்குத்தான் ! அமித் ஷா, ஜே.பி. நட்டா பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

தெலங்கானா மாநிலம் கம்மம் நகரிலிருந்து 100 அடி நீளம் கொண்ட கறுப்பு கிரனைட் கல் டெல்லிக்கு 1665 கி.மீ தொலைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக 140 சக்கரங்கள் கொண்ட டிரக் பயன்படுத்தப்பட்டது.
ராஜபாதையில் இன்று இரவு 8.45 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் இரவு 7மணி முதல் 9மணிவரை சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!