இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வதுஇடத்தையும் பிடித்தனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று இரவு 11.15 மணிக்கு வெளியிட்டது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வதுஇடத்தையும் பிடித்தனர்.
நாடுமுழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
கடந்த ஜூலை 17ம் தேதி 497 நகரங்களில் உள்ள 3,570 தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடந்தது. இதில் 95% பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்
முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அபு தாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத்சிட்டியில் தேர்வு நடந்தன.
NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
சிபிஎஸ்ஜி முடிவுகள் தாமதமானதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளும் தாமதமானது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்து. அதன்படி இரவு 11.15 மணிக்கு நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இ்ந்த நீட் தேர்வில் மொத்தம் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவரி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்தார். இவர் நீட் தேர்வில் 99.99 மதிப்பெண்கள் எடுத்தார். டெல்லியைச் சேர்ந்த மாணவி வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வது இடத்தைப் பிடித்தார்.
வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4லட்சத்து 29ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63ஆயிரத்து 902 மாணவிகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டாப்-10 மாணவர்கள்
3-வது இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் ரிஷிகேஷ் நாகபூஷன் கங்குலே(715மதிப்பெண்), கர்நாடகாவைச் சேர்ந்த ருச்சா பவாஷே 4வது இடத்தையும், தெலங்கானாவைச் சேர்ந்த எர்ரபள்ளி சித்தார்த் ராவ் 5வது இடத்தையும் பிடித்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரிஷி வினய் பால்சே 6-வது இடத்தையும், பஞ்சாப்பைச் சேர்ந்த அர்பிதா நாரங் 7வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
8வது இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ணா, 9-வது இடத்தில் குஜராத்தைச் சேர்ந்த விபுல் வியாஸ், 10-வதுஇடத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹசிக் பர்வேஸ் வந்துள்ளார்.
உ.பி.யில அதிகபட்ச பாஸ்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 1.17 லட்சம் மாணவர்களும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1.13 லட்சம் மாணவர்களும், ராஜஸ்தானில் 82,548 மாணவர்களும்நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள், பாடவாரியாக கட்ஆப் மதிப்பெண், அனைத்து இந்திய தரவரிசையும் தரப்பட்டுள்ளது. இதை neet.nta.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நீட் தமிழகம் எப்படி