Corona india : இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,962 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4,270 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,76,817 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,270பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 4,041 பேருக்கும், நேற்று 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,692ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 2,619 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,28,073 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் பேர் 24,052 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !
அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் இதுவரை 194.09 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.நாட்டில் இதுவரை 1,94,09,46,157 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 11,92,427 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :AIADMK : அமமுக முக்கிய புள்ளிகள் அதிமுகவுக்கு தாவினர்..டிடிவி தினகரன் அதிர்ச்சி !