12 பேர் உயிரை காவு வாங்கிய உ.பி. இரசாயண ஆலை விபத்து.. பிரதமர் மோடி இரங்கல்..!

By Kevin KaarkiFirst Published Jun 5, 2022, 9:34 AM IST
Highlights

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் ஹப்புர் மாவட்டத்தில் உள்ள இரசாயண ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் போலீசாரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புது டெல்லியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து இருக்கும் தௌலானா தொழிற்சாலையில் இருந்த பாய்லர் வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டது என காவல் துறை செய்தி தொடர்பாளர் சுரேந்திர சிங் தெரிவித்து இருக்கிறார். விபத்தில் சிக்கிய ஆலை சி.என்.ஜி. பம்ப் எதிரே உள்ளது. ஆலையில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

மேற்கூரை சேதம்:

இந்த ஆலையில் ஏற்பட்டு இருக்கும் விபத்து காரணமாக அருகில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரை சேதம் அடைந்து இருக்கின்றன. தீ அணைப்பு வீரர்கள் ஆலையில் கொளுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர மூன்று நேரம் போராடினர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இந்த ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதை விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இது மிகவும் துயரமான சம்பவம் ஆகும். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆலையில் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரிக்கும் பணிகளில் நிபுணர்கள் ஈடுபட்டனர்,” என்று ஹப்புர் மாவட்ட மாஜிஸ்திரேட் மெதா ரூபம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:

“காயமுற்று இருப்பவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களின் முயற்சி தீவிரமாக உள்ளது. காயமுற்றவர்களில் சிலர் சஃபதர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஆலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் 12 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர். 

“உத்திர பிரதேச மாநிலத்தின் ஹப்புர் மாவட்டத்தில் உள்ள இரசாயண ஆலையில் ஏற்பட்ட விபத்து பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவி செய்வது மற்றும் சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

click me!