இன்று வங்கிகள் இயங்காது… 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு…

Asianet News Tamil  
Published : Feb 28, 2017, 08:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
இன்று வங்கிகள் இயங்காது… 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு…

சுருக்கம்

Today bank strike

இன்று வங்கிகள் இயங்காது… 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு…

வங்கி வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள்தான்  பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 10 லட்சம்  வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலைநாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியேதொடங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என பல கோரிக்கைக்கைளை ஊழியர் சங்கங்கள் வைத்துள்ளன.

இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில்  9 வங்கி ஊழியர் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் 10லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பங்கேற்பதால் இன்று  வங்கி சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட  தனியார் வங்கிகள் வழக்கம் போல்  இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 27 பொதுத் துறை வங்கிகள் தான் 75 சதவீத வர்த்த பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதனால் வங்கி சேவைகள்முடங்க வாய்ப்புள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?