ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் "சூப்பர் எருமை" - ருசிகர தகவல்

 
Published : Feb 27, 2017, 02:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் "சூப்பர் எருமை" - ருசிகர தகவல்

சுருக்கம்

Yuvraj my family and gives earning maintain and livestock

ரூ.9.30 கோடி மதிப்பிலான சூப்பர் எருமை  ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்தை  அதன் முதலாளிக்கு ஈட்டித்தருகிறது என்றால் நம்பமுடிகிறதா !!!!!!

கிராமோதியா மேளா

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ள நகரம் சித்தரகூட். இங்கு சமீபத்தில் சுரேந்திரபால் கிராமோதியா சார்பில், தீனதயாள் வளாகத்தில்,  கிராமோதியா மேளா நடந்தது.

அதில் அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் ஈர்த்தது யுவராஜ் என பெயரிடப்பட்ட இந்த "சூப்பர் எருமை காளை" மாடு. 

ரூ.9.30 கோடி

அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரைச் சேர்ந்த யுவராஜ் சூப்பர் எருமை மாடு 1.5 டன் எடையும், 11.5 அடி நீளமும், 5.8 அடி உயரமும் கொண்டது.

 இந்த "யுவராஜ்" எருமை மாட்டுக்கு 9 வயதாகிறது. இதன் இப்போதைய மதிப்பு சர்வதேச அளவில் ரூ.9.30 கோடியாகும். 

எனது பிள்ளை

இது குறித்து சூப்பர் எருமை மாட்டின் சொந்தக்காரர் கரம்வீர் சிங்  கூறுகையில்,  " யுவராஜ் "சூப்பர் எருமை காளைமாடு" என் குடும்பத்தில் ஒரு உறுப்பினர், எனது பிள்ளையைப் போல் வளர்த்து வருகிறேன். 

10 கிலோ பழங்கள்

இப்போது 9 வயதாகும் யுவராஜுக்கு நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்க கொடுக்கிறேன், 10 கிலோ பழங்கள் குறிப்பாக ஆப்பிள்,டர்னிப், 5 கிலோ பச்சைப் புல், 5 கிலோ வைக்கோல் உணவாகக் கொடுக்கிறேன். அதுமட்டுமல்லாமல், தினமும் 5 கிலோமீட்டர் நடைபயிற்சியும் யுவராஜ் எடுக்கிறது. 

ரூ.5 ஆயிரம் செலவு

என்னுடைய யுவராஜ் மாட்டுக்கு விலையே இல்லை, சமீபத்தில் நடந்த மாடுகளுக்கான மேளாவில், ரூ.9.25 கோடிக்கு விலை கேட்கப்பட்டது.

ஆனால், நான் கொடுக்கவில்லை. நாள்தோறும் இந்த மாட்டின் பராமரிப்பு, உணவுக்காக ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்கிறேன். 

ஏற்றுமதி

இந்த எருமை மாட்டின் விந்தனுக்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 14 மில்லி  விந்தனுக்கள் எடுக்கப்பட்டுகிறது, மாதத்துக்கு 700 முதல் 900 முறை விந்தனுக்கள் சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாட்டின் ஒரு மில்லி விந்தனு ரூ500க்கும் அதிகமாக வாங்கப்படுகிறது. 

ரூ.50 லட்சம் வருவாய்

இந்த யுவராஜ்  மாட்டின் மூலம் ஆண்டுக்கு எனக்கு ரூ. 50 லட்சம் வருவாய் கிடைக்கிறது. அதனால்,தான்  நாள்  ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை செலவு செய்கிறேன். யுவராஜ் எனது குடும்பத்தையும், மற்ற கால்நடைகளையும் பராமரிக்க சம்பாதித்து கொடுக்கிறது " எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!