உஷார்.. வங்கிகள் நாளை ஸ்டிரைக்.. பணத்தை எடுத்து வச்சிகோங்க...!!

 
Published : Feb 27, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
உஷார்.. வங்கிகள் நாளை ஸ்டிரைக்..  பணத்தை எடுத்து வச்சிகோங்க...!!

சுருக்கம்

For the past 4 months after the announcement of measures matippilappu cash at banks formerly bustling resort crowds. Bank employees were more workloads.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை அடுத்து கடந்த 4 மாதங்களாக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடுதலாகவே இருந்தது.

பொது மக்களுக்கு வழங்க போதுமான பணம் வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மதிப்பிப்பு பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை  பொதுத் துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என பல கோரிக்கைகளை ஊழியர் சங்கங்கள் வைத்துள்ளன.

நாளை நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில்  9 வங்கி ஊழியர் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பங்கேற்பதால் நாளை வங்கி சேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் என தெரிகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட  தனியார் வங்கிகள் வழக்கம் போல் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 பொதுத் துறை வங்கிகள் தான் 75 சதவீத வர்த்த பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதனால் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது.

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?