வெளிநாடு வாழ் இந்தியர்களா நீங்கள் ? பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு…

First Published Feb 28, 2017, 6:48 AM IST
Highlights
One more chance to exchange old notes


வெளிநாடு வாழ் இந்தியர்களா நீங்கள் ? பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு…

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதை வங்கிகள் நிறுத்திக் கொண்டன.இதனையடுத்து ரிசர்வ் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த திட்டமும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கடந்த ஆண்டு நவம்பர் 9–ந்தேதியில் இருந்து டிசம்பர் 30–ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து  பிற்பகல் 2.30 மணிவரை செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும்  மார்ச் 31–ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 9–ந்தேதி முதல் டிசம்பர் 30–ந்தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல்,  இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியில் சம்ர்ப்பிக்க வேண்டும்.

அடையாளச் சான்று ஆவணம் அல்லது ஆதார் அட்டை,வருமான வரிக்கணக்கு எண் அட்டையின் நகல், நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரையிலான  வங்கிக் கணக்குகளின்  நகல்கள் ஆகியவற்றை வங்கியில் காட்ட வேண்டும்.

என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 9–ந்தேதி முதல் டிசம்பர் 30–ந்தேதி வரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல், இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும் முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கங்கள் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பளித்துள்ளது.

 

 

click me!