பிரதமர் பதவியும் வேண்டாம், அதை நான் விரும்பவும் இல்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நேரம் இது என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பிரதமர் பதவியும் வேண்டாம், அதை நான் விரும்பவும் இல்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நேரம் இது என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்தார்.
2024ம் ஆண்டு தேர்தலில் பாஜகை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிதிஷ் குமாருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.
csif: airports: விமானநிலைய பாதுகாப்பு தனியார் வசம் செல்கிறது! 3,000 சிஎஸ்ஐஎப் பணியிடங்கள் நீக்கம்
இந்நிலையில் ஐக்கியஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் நேற்று டெல்லி வந்தார். காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் ஹெடி குமாரசாமி ஆகியோரை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் டெல்லி சென்று ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் திட்டமிட்டார்.
கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜாவை நிதிஷ் குமார் சந்தித்த நிலையில் இன்று. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை நிதிஷ் குமார் சந்தித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடும்போது, பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை முன்நிறுத்தியே நிதிஷ் குமாரும் பணியாற்றுகிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன
அதன்பின் நிதிஷ் குமார் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நேரம். இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடுள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கிறேன்.
எனக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இளமைக் காலத்தில் இருந்தே நீண்டகாலத் தொடர்பு உள்ளது. என்னை இங்கு எப்போதுமே பார்த்திருக்க முடியாது.
ஆனால், டெல்லிக்கு எப்போதெல்லாம்வருகிறேனோ அப்போதெல்லாம் சிபிஎம் அலுவலகம் வருவேன். இன்று நாங்கள் மீண்டும் ஒன்றுச சேர்ந்துள்ளோம். அனைத்து இடதுசாரிகள், பிராந்திய கட்சிகள், காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைப்பதுதான் நோக்கம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பது மிகப்பெரிய பணி. நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறேன்ற கேள்வி தவறானது. நான் அதற்கு உரிமை கோரவும் இல்லை, விரும்பவும் இல்லை” எனத் தெரிவித்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் “ எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளது, பாஜகவுக்கு எதிரான போரில் பங்கெடுத்துள்ளது, இந்திய அரசியலில் மிகப்பெரிய சமிக்ஞை. முதலில், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பது, பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதுஅல்ல. நேரம் வரும்போது, நாங்கள் அனைவரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்போம் அப்போது உங்களுக்குத் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்