புதுப்பொலிவுடன் மத்திய விஸ்தா திட்டம்: வரும் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

By Pothy Raj  |  First Published Sep 6, 2022, 1:49 PM IST

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா திட்டத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.


டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா திட்டத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி திறந்து வைக்கஉள்ளார்.டெல்லியில் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரை மத்திய விஸ்தா திட்டத்தின் ஒருபகுதியாக புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டது. 

Tap to resize

Latest Videos

 

டெல்லியில் மத்திய அரசின் நிர்வாகப் பகுதியே மத்திய விஸ்தா பகுதி என்று அழைப்படுகிறது.

 

மத்திய விஸ்தா பகுதிதான் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் உள்ளன

குறிப்பாக, குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், ராஜபாதை, மத்திய அரசு அலுவலகங்கள், உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த்பிளாக், நிதிஅமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்  இங்கு உள்ளன

 

 

ரூ.13,450 கோடியில் மத்திய விஸ்தா பகுதியை புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

 

 

இதன் ஒருபகுதியாக ரூ.1,339 கோடியில் முதலில் 2 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

 

மத்திய விஸ்தா திட்டத்தின் ஒருபகுதியாக விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான பகுதிகள் புதுப்பிக்கும் பணிகள் முடிந்துள்ளன

 

இங்கு ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் அதிகமான சதுரபரப்பளவில் இதற்கு முன் இருந்த சாதாரண தரைநடைபாதைகள்,புதுப்பிக்கப்பட்டு கிரனைட் நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளன

 

 

நடைபாதைகளைச் சுற்றி புற்கள் வைக்கப்பட்டு பசுமையாக காட்சியளிக்கின்றன. இந்த விஸ்தா திட்டத்தை வரும் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

 

click me!