லிப்டில் இருந்த சிறுவனை கடித்த நாய்.. வலியால் துடித்த போதும் கண்டுக்கொள்ளாமல் நின்ற உரிமையாளர்.! வைரல் வீடியோ

Published : Sep 06, 2022, 12:50 PM ISTUpdated : Sep 06, 2022, 02:10 PM IST
லிப்டில் இருந்த சிறுவனை கடித்த நாய்.. வலியால் துடித்த போதும் கண்டுக்கொள்ளாமல் நின்ற உரிமையாளர்.! வைரல் வீடியோ

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் லிப்டில் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்துக்கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் லிப்டில் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்துக்கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகரில் உள்ள லிப்டில் சிறுவன் முதலில் சென்றுள்ளார்.  பின்னர், பெண்மணி ஒருவர் நாயுடன் லிப்டில் வந்துள்ளார். அப்போது, சிறுவன் நகரும்போது நாய் அந்த சிறுவனின் தொடையில் கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்துக்கொண்டிருந்தார்.  

இதையும் படிங்க;- cyrus mistry: seat belt:tata sons: சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

ஆனால், சிறுவன் துடித்தபோதும் எதுவும் நடக்காதது போல நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். அதன் பின்னர், லிப்டிலிருந்து  நாயை வெளியே அழைத்து சென்ற போதும் நாய் சிறுவனை கடிக்க முற்பட்டது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பெண்ணின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்கு  பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. 

இதையும் படிங்க;-  வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு குடிநீர் விநியோகம் ரத்து !!

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!