3 வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

 
Published : Jan 18, 2018, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
3 வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

சுருக்கம்

three north east states election date announced

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.  

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவைகள் வரும்  மார்ச் 6, மார்ச் 13, மார்ச் 14 ஆகிய தேதிகளுடன்  முடிவடைகின்றன.  இதை அடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.  

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன. இந்த  மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிப்பதாகக் கூறியிருந்தது. அதன்படி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், திரிபுராவில் பிப்ரவரி 28லும்,  மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதியிலும் தேர்தல் நடைபெறும் அறிவித்தார்.

இதை அடுத்து, இந்த மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள்  மார்ச் 3ம் தேதி எண்ணப்படும். 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"