
உத்திரபிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 வயது சிறுவன் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே மோஹன்புரா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் மாதவ் பரத்வாஜ்.
இந்நிலையில் அப்பகுதிக்கு காலை 6 மணியளவில் போலீசார் 3 பேர் ரவுண்ஸ் வந்ததாக தெரிகிறது. மேலும் அங்கிருந்தவர்களிடம் ஒரு கொள்ளை சம்பவம் குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மாதவ் பரத்வாஜ் மீது தவறுதலாக குண்டு பாய்ந்துள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆனால் கொள்ளை கும்பல் குறித்து விசாரித்து கொண்டிருந்த போது போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பதில் தாக்குதலாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு குண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைத் தாக்கிவிட்டது என்றும் போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.