
உத்திரபிரதேச மாநிலத்தில் கத்திகுத்து காயங்களுடன் கழிவறையில் கிடந்த 1 ஆம் வகுப்பு மாணவன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே காரணம் என மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் அமைந்த பிரைட்லேண்ட் பள்ளி கூடத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கத்தி குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
தமது மகனின் இத்தகைய செயலுக்கு 6 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே காரணம் என மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் அந்த மாணவி யார் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம், இதுகுறித்து கூறுகையில் நீல திமிங்கலம் விளையாட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு ரியான் சர்வதேச பள்ளி கூடத்தின் 2ம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் பள்ளியின் கழிவறை அருகே காயங்களுடன் இறந்து கிடந்துள்ளான். இதனை அடுத்து அந்த பள்ளியின் 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவனிடம் போலீசார் விசாரனை நடத்துகையில் தேர்வு ஒன்றை நிறுத்தி வைப்பதற்காகவும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டத்தினை நடக்காமல் தடுப்பதற்காகவும் கொலை செயலில் ஈடுபட்டதாக காரணம் தெரிவித்தான்.