மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மணிப்பூர் வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், மாநிலத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் முதலில், முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மணிப்பூர் நிலைமையைக் கையாள்வதில் பாஜக அரசு எவ்வளவு பிரசாரம் செய்தாலும் அதன் மோசமான தோல்வியை மறைக்க முடியாது என்றும் கார்கே கூறினார்.
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த அமித் ஷா!!
மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இறுதியாக மோடியுடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் “கடந்த 55 நாட்களாக மணிப்பூர் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் பேசுவதற்காக ஒவ்வொரு இந்தியரும் காத்திருக்கிறார்கள். மோடி ஜிக்கு உண்மையிலேயே மணிப்பூர் மீது அக்கறை இருந்தால், முதலில் அவர் செய்ய வேண்டியது, மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் “ மணிப்பூர் வன்முறையைக் கையாள்வதில் பாஜக மற்றும் மோடி அரசு எவ்வளவு பிரசாரம் செய்தாலும் அவர்களின் மோசமான தோல்வியை மறைக்க முடியாது. தீவிரவாத அமைப்புகள் மற்றும் சமூக விரோத சக்திகளிடமிருந்து திருடப்பட்ட" ஆயுதங்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர பல நடவடிக்கைகளை பரிந்துரைத்த கார்கே, அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து பொதுவான அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும் என்றார்.
பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். தேசிய நெடுஞ்சாலைகளைத் திறந்து பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொகுப்பு தாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி மிகவும் போதுமானதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மணிப்பூரில் "வளர்ந்து வரும் சூழ்நிலை" பற்றி பிரேன் சிங் ஷாவிற்கு இங்கு விளக்கினார், மேலும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் மிகபெரிய அளவில் ன்முறையைக் கட்டுப்படுத்த முடிந்ததாகக் கூறினார். மணிப்பூரில் உள்ள மெய்டே மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட கான்வாயுடன் மகாராஷ்டிரா புறப்பட்ட தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர்.. மிஷன் வெற்றி பெறுமா?