தேதி குறிப்பதில் தடுமாற்றம்... 'இந்தியா' கூட்டணியின் 3வது கூட்டம் செப்டம்பருக்கு மாற்றம்! காரணம் இதுதானாம்!

By SG Balan  |  First Published Jul 29, 2023, 9:42 PM IST

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மும்பையில் நடத்தவிருக்கும் கூட்டம் ஆகஸ்ட் மாத இறுதிக்குப் பதிலாக செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்க உள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்திற்கு சில தலைவர்கள் வர இயலாத சூழலில் இருப்பதாகக் கூறியதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ஆகஸ்ட் 25-26 தேதிகளில் நடக்க இருந்த கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளது என்று நெருக்கமான வட்டார தகவல்கள் கூறுகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமீபத்தில் தனது கட்சி பிளவுபட்டுள்ள சூழலில் தனது செல்வாக்கை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கிறார். ஆகஸ்ட் நடுப்பகுதியில் அவர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனால், அவரும் ஆகஸ்ட் இறுதியில் கூட்டம் நடந்தால் வரமுடியாது எனக் கூறியதாகத் தெரிகிறது.

Tap to resize

Latest Videos

"ஆகஸ்ட் 25, 26ஆம் தேதிகள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அனைவருக்கும் கூட்டத்திற்கு வருவதை உறுதி செய்வதற்காக மற்றொரு தேதியை பார்க்கிறோம்" என்று மும்பையில் உள்ள இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!

வெள்ளிக்கிழமை மகா விகாஸ் அகாதியின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், கூட்டணி தலைவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள இருந்த பேரணிகள் பருவமழை காரணமாக தள்ளப்போயிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் மும்பை கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் உத்தவ் தாக்கரேவின் அணி முன்னணியில் உள்ளது. இதனிடையே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், என்.சி.பி. மற்றும் உத்தவ் தாக்கரே அணி ஆகியவை  அடுத்த சனிக்கிழமை மீண்டும் சந்திக்க உள்ளன.

இச்சூழலில், ஆகஸ்ட் 1ஆம் தேதி புனேவில் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்ளும் கூட்டத்தில் சரத் பவாரும் பங்கேற்க திட்டமிடப்பட்டிருக்கிறார். இது சில எதிர்க்கட்சித் தலைவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கூட்டணியில் உள்ள பல உறுப்பினர்கள் அதைப்பற்றி கவலை தெரிவித்ததாகவும், மூத்த தலைவர் ஒருவர் மோடியுடன் ஒரே மேடையில் இருப்பது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மோசமாகப் பாதிக்கும் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் இந்த மாத மத்தியில் பெங்களூருவிலும் நடைபெற்றன. மூன்றாவது கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட இருப்பதாவும், குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது நினைவூட்டத்தக்கது.

கடற்படை அதிகாரிகள் கையில் தடி எதுக்கு? காலனி ஆதிக்க நடைமுறைக்கு குட்-பை சொல்லும் கடற்படை!

click me!