உலக அளவில் பெரும்பாலான மக்கள் தனியாகவோ, அல்லது குழுக்களாகவோ, நீண்ட நெடும் பயணமாக இருந்தாலும், அல்லது சிறு தொலைவிலான பயணமாக இருந்தாலும், நிம்மதியாக உறங்கிக் கொண்டே இயற்கை உபாதைகளை பற்றி கவலைப்படாமல் செல்லக்கூடிய ஒரு பயணமாக இருக்கின்றது ரயில் பயணங்கள்.
குறிப்பாக இந்திய ரயில்வே பொறுத்த வரை பல கோடி மக்கள் அனுதினம் அதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே. ரயிலின் படுக்கை வகுப்பில் பயணம் செய்யும் பலரிடம் சர்வ சாதாரணமாக எழும் ஒரு பிரச்சனை தான் இந்த மிடில் பர்த் பிரச்சனை.
அதில் படுத்து உறங்கும் பயணிகள் சிலர், சில சமயங்களில் ரயிலில் ஏறிய உடனேயே பிறர் கீழே அமர முடியாத நிலையில், அந்த மிடில் பர்த்தை உயர்த்தி படுத்துக்கொள்வதை நாம் பார்த்திருப்போம். அந்த பிரச்சனைகள் பெருமளவு தலைவலியை ஏற்படுத்திய நிலையில் இரவு நேரங்களில் ரயிலில் பயணிக்கும்பொழுது 9 மணிக்கு தான் தங்களுக்கான பெர்த்களில் மக்கள் படுத்து உறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கியது! 7 சாட்டிலைட்களுன் நாளை விண்ணில் பாய்கிறது!
அதாவது இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை பிறருக்கு பிரச்சனை இல்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெர்த்துகளில் பயணிகள் படுத்து உறங்கலாம். ஆனால் தற்பொழுது இந்த ஒன்பது மணி நேர தூக்கமானது, 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆம், புதிதாக அமலாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட அனைத்து ரயில்களிலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 மணிக்கு மேலும் அப்பர் அல்லது மிடில் பெர்த்தை சேர்ந்த பயணிகள், படுக்கச் செல்லாமல் லோவர் பெர்த்தில் அமர்ந்திருந்தால், அதுவும் சட்டப்படி குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மிடில் பெர்த்தில் உள்ளவர்கள், தங்களுக்கான பரத்தை உயர்த்தும்பட்சத்தில் அதை Lower பெர்த்தில் உள்ளவர்கள் மறுக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!