கடற்படை அதிகாரிகள் கையில் தடி எதுக்கு? காலனி ஆதிக்க நடைமுறைக்கு குட்-பை சொல்லும் கடற்படை!

By SG Balan  |  First Published Jul 29, 2023, 8:25 PM IST

இந்தியக் கடற்படையின் வெவ்வேறு நிலைகளில் காலனியாதிக்க கால தாக்கங்களை அகற்றும் முயற்சியாக அதிகாரிகள் கையில் தடியை ஏந்தும் முறை கைவிடப்படுகிறது.


இந்திய கடற்படை தனது மூத்த அதிகாரிகள் கையில் தடியை ஏந்தி இருக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து பின்பற்றப்படும் இந்த வழக்கத்தை நிறுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கடற்படையின் வெவ்வேறு நிலைகளில் காலனியாதிக்க கால தாக்கங்களை அகற்றுவதற்கான முயற்சியாகவும் சொல்லப்படுகிறது.

கடற்படையால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தகவலில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தடியடிகளை எடுத்துச் செல்லும் நடைமுறையைப் பின்பற்றுவது  கடற்படைக்கு பொருந்தாதது என்று  சொல்லப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கியது! 7 சாட்டிலைட்களுன் நாளை விண்ணில் பாய்கிறது!

இந்தியாவின் அமிர்த காலத்தில் மாற்றங்களைக் கண்டுள்ள இந்திய கடற்படையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தடியடியை வைத்திருப்பதற்கான அவசியம் இல்லை என்றும் தலைமை அதிகாரி உட்பட அனைத்து பணியாளர்களும் தடியடிகளை எடுத்துச் செல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கடற்படை கூறுகிறது.

ஒவ்வொரு கடற்படை அலுலவகங்களிலும் அதிகார மாற்றத்தின்போது தடியை ஒப்படைப்பது ஒரு சம்பிரதாய நிகழ்வாக அலுவலகத்திற்குள் பின்பற்றப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன நாடு அமிர்த காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படைகள் தங்கள் காலனித்துவ நடைமுறைகளை கைவிடுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கடந்த காலங்களில் பிரிட்டிஷ் கால நடைமுறைகளை அகற்ற கடற்படை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, கடற்படை அதன் வெள்ளைக் கொடியில் இடம்பெற்றிருந்த கிடைமட்ட மற்றும் செங்குத்து சிவப்பு கோடுகளை அகற்றியது. இந்தியாவின் சின்னத்துடன் புதிய கொடியை ஏற்றுக்கொண்டது.

நிஷான் என்று பெயரிடப்பட்ட புதிய கொடியின் மேல் இடதுபுறத்தில் மூவர்ணக்கொடி உள்ளது. இந்திய கடற்படையின் சின்னம் எண்கோண வடிவில் உள்ளது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜின் ராஜமுத்திரையைக் குறிக்கிறது.

கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!

click me!