
மேற்கு வங்கத்தில் நடந்த எஸ்எஸ்சி நியமன ஊழலில் சிக்கி அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பர்தா சாட்டர்ஜி மகள் வீட்டில் கடந்த புதன்கிழமை பெரிய கொள்ளை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காரில் வந்து இறங்கிய கொள்ளையர்கள் பெரிய சாக்குப் பையில் நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றனர். வீட்டிலிருந்த சமையல் சிலிண்டரை எடுத்துவந்து வாசலில் வந்து திறந்துவிட்டு சென்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பணம் நகையுடன் மாயமான நடிகை அர்பிதா முகர்ஜியின் 4 சொகுசு கார்கள்.??? வலைபோட்டு தேடும் அமலாக்கத்துறை.
கொல்கத்தாவில் உள்ள பாரிப்பூர் பகுதியில் உள்ள கர்தாக்சயாவில் பர்தா சாட்டர்ஜியின் மகள் சோஹினி சாட்டர்ஜியின் பங்களா இருக்கிறது. சோஹினி சாட்டர்ஜி தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
மே.வங்க முன்னாள் அமைச்சர் பர்தா சாட்டர்ஜி, எஸ்எஸ்சி நியமன வழக்கில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் பர்தா சாட்டர்ஜி வீட்டிலும், நடிகை முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகள், விலை உயர்ந்த பொருட்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் இதுவரை ரூ.51 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ugc free courses: இலவசமாக 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப் பிரிவுகள்: யுஜிசி புதிய அறிவிப்பு
இந்நிலையில் மே.வங்க அமைச்சர் பதவி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்தும் பர்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டார். பர்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவர்கள் மீது சந்தேகம்வலுத்துள்ளதால், அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்குள் அவரின் மகள் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
சோஹினி சாட்டர்ஜியின் வீ்ட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் ஜலாம் அலி முல்லா கூறுகையில் “ புதன்கிழமை இரவு 4 பேர் காரில் வந்தனர். கார் சத்தம் கேட்டு நான்இரவு 1.30 மணிக்கு எழுந்து பார்த்தேன். என் கீழே இறங்கி வந்து பார்த்தபோது, அந்த 4 பேரும், சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர். என்ன அவதூறாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் செல்லுமாறு எச்சரித்தனர்” எனத் தெரிவித்தார்
இந்த வீட்டை பராமரித்துவரும் அபுதாஹிர் சர்தார் கூறுகையில் “ இதுவரை கொள்ளையர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. நான் வீ்ட்டு உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டேன். இது குறித்து போலீஸாருக்குத் தெரிவித்தேன். அவர்களும் வந்தார்கள் வீட்டுக்குள் செல்லவில்லை. கேஸ் சிலிண்டரை மட்டும் எடுத்துச்சென்றனர்” எனத் தெரிவித்தார்
விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு கூரையைப் பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்: என்ன அது?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில் “ இது கொள்ளைச் சம்பவம் அல்ல, நாடகம்.அமலாக்கப்பிரிவு கைகளுக்கு கிடைக்கும் முன் முக்கிய ஆவணங்களை அழிக்கவே திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.