தலைசிறந்த தமிழ்ப் புலவரான திருவள்ளுவரின் ஞானம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..

By Ramya s  |  First Published Jan 16, 2024, 11:36 AM IST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை போற்றும் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் தை 2-ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழில் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் வாழ்த்து சொன்ன ஆளுநர்.. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..

இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம்  வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.  காலத்தால் அழியாத அவரது போதனைகள்   நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த  அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம்  வலியுறுத்துவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை…

— Narendra Modi (@narendramodi)

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவர் தின வாழ்த்து செய்தியை தெரிவித்திருந்தார். அதில் காவி நிற உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை அவர் பயன்படுத்திருந்தார் என்பது குறிப்ப்டத்தக்கது. 

click me!