பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை; சுக்குநூறாக நொறுங்கியது

By Velmurugan s  |  First Published Aug 26, 2024, 7:58 PM IST

பிரதமர் மோடியால் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட 35 அடி உயரம் கொண்ட சத்ரபதி சிவாஜியின் சிலை திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு.


மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடற்படை தினத்தை முன்னிட்டு 35 அடி உயரத்தில் சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது. இதனிடையே கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

துரைமுருகனை முதலமைச்சர் ஆக்குங்கள்; திமுக.வுக்கு சீமான் அறிவுரை

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக வலுவிழந்த சிவாஜியின் சிலை இன்று திடீரென கீழே விழுந்து முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலை கீழே விழுந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

தலைமைச் செயலகத்தில் அரசு வேலை; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அற்புதமான அறிவிப்பு

விபத்து தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பா எந்த விவரமும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும். மேலும் அதே இடத்தில் புதிய சிலையை அமைக்க நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, கடல் கோட்டையை கட்டியதில் மாமன்னர் சிவாஜியின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சிலை நிறுவப்பட்டது. இந்த சம்பவத்தை விரைவாக செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

click me!