நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன? கேரளாவை உலுக்கும் வழக்கின் முழு விவரம்

By SG BalanFirst Published Aug 26, 2024, 7:27 PM IST
Highlights

மலையாளத் திரையுலகம் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் பரபரப்பாக உள்ளது. மாநில அரசு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முழு அறிக்கையையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாளத் திரையுலகம் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் பரபரப்பாக உள்ளது. த்ரிஷ்யம் மற்றும் 2018 போன்ற திரைப்படங்கள் மூலம் பெயர் பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சித்திக், தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக திங்கட்கிழமை பதில் புகார் அளித்துள்ளார்.

சித்திக்கின் புகார் கேரள காவல்துறை தலைமை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஷம்மி திலகன், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னணி மலையாள நடிகருமான மோகன்லால் ஆகியோரையும் குற்றம்சாட்டியுள்ளார்.

Latest Videos

பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து மோகன்லால் "பதிலளிக்கும் திறனை இழந்துவிட்டார்" என்று அவர் கூறியுள்ளார். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரை உலகில் உள்ள பல பெண்களின் சாட்சியங்களைக் கொண்டுள்ளது.

அறிக்கையில் சில இடங்களில் பெண் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சிறுமி என்று கூறியிருப்பதால் சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிகிறது. பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அனுராதா திவாரி? 'பிராமின் ஜீன்' சர்ச்சையைக் கிளப்பிய பெங்களூரு சி.இ.ஓ விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்:

2016ஆம் ஆண்டு சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர் குற்றம்சாட்டினார். அவர் தன்னை முதலில் அணுகியபோது 'மோலி' (மகள்) என்று அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு என்ன நடந்தது என்பதை மீண்டும் மீண்டும் விளக்குவதில் சோர்வாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை கூறியுள்ளார். சித்திக்க்குடன் ஆன்லைனில் தான் அறிமுகம் ஆனதாகவும் நேரில் சந்தித்தால் வரவிருக்கும் படத்தில் நடிப்பதாக உறுதி அளித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அங்கு அவர் நடிகையிடம் 'சில அட்ஜஸ்ட்களைச் செய்ய முடியுமா' என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஹோட்டல் அறையில் சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் முன் சுயஇன்பம் செய்ததாகவும் அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய நடிகர் ஷம்மி திலகன், அவரும் பயத்தில் இருப்பதாகவும் கூறினார். ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் கருதுகிறார்.

கேரளா சல்சித்ரா அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து மலையாளம் ரஞ்சித் விலகினார். அதே சமயம் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார். பெங்காலி நடிகை ஒருவர் ரஞ்சித் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முழு அறிக்கையையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாள நடிகர் ஒருவரை ஐந்து பேர் கடத்திச் சென்று, ஓடும் காரில் தாக்கியதாகக் கூறப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 2017 இல் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. தன்னைக் காரில் கடத்திச் சென்று தாக்கியது பற்றி, பாதிக்கப்பட்ட நடிகர் போலீசில் புகார் அளித்தார்.

மலையாள நடிகர் திலீப் தான் அந்த நடிகருக்குப் பாடம் கற்பிக்க தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி ஹேமா கமிட்டியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹேமா, மூத்த நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கேபி வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குடை பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் தூக்கம் போட்ட முதியவர்! வைரலாகும் விநோத சம்பவம்!!

click me!