ஆசிரமத்தில் இருந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது..

Published : Jun 20, 2023, 07:52 PM ISTUpdated : Jun 20, 2023, 07:55 PM IST
ஆசிரமத்தில் இருந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது..

சுருக்கம்

ஆந்திராவில் ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்ற சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியார் கைது செய்யப்பட்டார்

ஆந்திராவில் சாமியார் ஒருவர், தான் நடத்தி வந்த ஆசிரமத்தில் 15 வயது சிறுமியை பல மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விஜயவாடாவில் உள்ள காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாகப்பட்டினம் வென்கோஜியில் உள்ள ஞானானந்த ஆசிரமத்தின் நிர்வாகி பூர்ணானந்த சரஸ்வதி கைது செய்யப்பட்டார். பூர்ணானந்த சரஸ்வதி தன்னை பலமுறை சித்திரவதை செய்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ சிறுமியின் பெற்றோர் இறந்துவிட்டதால், அவரது தாய்வழி பாட்டி அவளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் விட்டுச் சென்றுவிட்டார்.  பூர்ணானந்த சரஸ்வதி, கடந்த பல மாதங்களாக ஆசிரமத்திற்குள் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாததால், சூழ்நிலையை தனக்கு சாதகாமாக்கி கொண்ட பூர்ணானந்த சரஸ்வதி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார்” என்று தெரிவித்தார்.

உடலில் சூடு! குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை.. காமவெறி பிடித்த தாய் சிக்கியது எப்படி?

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்து வசித்த 16 வயது சிறுமி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அச்சிறுமி 2016 முதல் அங்கு வசித்து வந்ததாகவும், கடந்த 13-ம் தேதி அந்த ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடந்த 15-ம் தேதி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

64 வயதான சுவாமி பூர்ணானந்தா, இரட்டை முதுகலைப் பட்டம், பி.எட்., மற்றும் சட்டப் பட்டப்படிப்புகளுடன் உயர் கல்வித் தகுதி பெற்றவர். அவர் மீது ஏற்கனவே பல பாலியல் தொல்லை புகார்கள்  இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், நிலத் தகராறில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 9.5 ஏக்கர் ஆசிரம நிலமும் சர்ச்சையில் உள்ளது. நிலத்தை கண்காணித்தவர்களால் தான் தன் மீதான வழக்குகள் போடப்பட்டதாக பூர்ணானந்தா போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

தெலங்கானாவில் சூனியம் வைத்த தம்பதியரை மரத்தில் கட்டி தொங்கவிட்ட கிராம மக்கள்

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!