புலம்பெயர்ந்த சின்- குக்கி சமூகத்தின் அதிக நிலத்தைப் ஆக்கிரமிப்பது மற்றும் அதிகாரத்திற்கான ஆசையே வன்முறைக்கு காரணம் என்று மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மெய்தி இன மக்கள் இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குக்கி, மெய்தி இன மக்களிடையே வன்முறை வெடித்து வருகிறது. இன்று மெய்தி இனமக்களுக்கான உலக மெய்தி கூட்டத்திற்குப் பின்னர் வன்முறைக்கு யார் காரணம் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் குக்கி இன மக்கள்தான் இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
* நிலத்தை அபகரிக்க வேண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த குக்கி இன மக்களின் எண்ணம்
* வங்காளதேசம், மியான்மர் மற்றும் இந்தியாவின் பகுதிகளைக் கொண்டு குக்கிலாந்து என்ற கனவை அடைய வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
* அவர்கள் பழங்குடியினர் போல் நடந்து கொள்வதில்லை.
* அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பழங்குடியின அந்தஸ்து மிகப்பெரிய தவறு. அவர்கள் இந்தியர்கள் அல்ல. அவர்கள் மியான்மரின் பழங்குடியின மக்கள்.
* அவர்களின் மோசமான அரசியல் இலக்குகளை அடைய மெய்தி இன மக்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்.
மே 3 ஆம் தேதி நடந்த வன்முறை திடீரென நடந்த சம்பவமா? அல்லது திட்டமிடப்பட்டு குக்கி இனமக்களின் தனி நிர்வாகம் என்ற இலக்கை அடைய கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையா? குக்கி நூற்றாண்டு வாயில் எரிப்பு சம்பவம் வன்முறை வெடித்ததற்கான காரணமாக இருக்க முடியாது
* லீசாங் கிராமத்தில் உள்ள குக்கி நூற்றாண்டு போர் வாயில் எரிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது என்று குக்கி இனத்தைச் சேர்ந்த அறிவு ஜீவிகள் தெரிவித்து வருகின்றனர். இது தவறான செய்தி.
* லீசாங் கிராமத்தில் மதியம் 2.15 மணியளவில் போர் நூற்றாண்டு வாயில் எரிக்கப்பட்டது. அதேசமயம் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் காலை 11.30 மணி முதல் வன்முறையில் ஈடுபட்டனர்.
வனத்துறை அலுவலகம் எரிப்பு, சுராசந்த்பூரில் மெய்தி இன மக்கள் மீது தாக்குதல் என வன்முறையை துவக்கினர்.
* வன்முறையைத் தவறாக வழிநடத்துவதற்காக குக்கி இனத்தவர்களே தீ வைத்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று (ஜூன் 19 ஆம் தேதி) இந்த சதி திட்டத்தை உள்ளூர் செய்தி சேனல் ஒன்று உறுதிபடுத்தியுள்ளது.
போராளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் குக்கி எம்எல்ஏக்கள்?
மணிப்பூரைச் சேர்ந்த 10 குக்கி எம்.எல்.ஏ.க்கள் தனி நிர்வாகத்திற்கான மனுவை
12 மே ஆம் தேதி அன்று சமர்ப்பித்து இருந்தனர். முரண்பாடாக, இந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ குக்கி அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர்.
பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பு:
* மணிப்பூரில் முதலில் வன்முறையைத் துவக்கியவர் யார்? பின்னணியில் உள்ள நோக்கங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்
* தங்களது அரசியல் நோக்கத்தை அடைவதற்காக குக்கி இனத்தவர்கள்தான் வன்முறையை துவக்கினார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
* மெய்தி இன மக்கள் சொந்த பிழைப்புக்காக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
இந்த வன்முறையில் ஏற்பட்ட முழு சேதங்களுக்கும் குக்கி பொறுப்பேற்க வேண்டும். வன்முறைக்கு எந்த வகையிலும் மெய்தி காரணமாக இல்லை.
எரியும் நெருப்பில் எண்ணெய்:
* மெய்தி இன மக்களுக்கு எதிராக, குக்கி இன மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அசாம் ரைபிள்ஸ் திரும்பப் பெற வேண்டும்
* மேலும், விரைவு படையைச் சேர்ந்தவர்கள் கடைகளுக்கும், கார்களுக்கும் தீ வைத்தனர்.
* மத்திய பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையை மெய்தி இழந்துவிட்டது.
பெரிய சதித்திட்டம்:
* பாஜக அரசு அவர்களுக்கு உதவாததை மனதில் கொண்டு, தாங்களாகவே மெய்தி இன மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து ஆட்சி நிர்வாகம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்துள்ளனர்.
* இன்னும் மெய்தி இன மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. வன்முறை தொடர்கிறது.
* மாநிலத்தின் பொருளாதார உயிர்நாடியான தேசிய நெடுஞ்சாலை எண். 2 காங்போக்பி வழியாக செல்கிறது. குக்கி போராளிகள் 10 கிமீ தூரம் வரையிலான சாலையை அடைத்துக் கொண்டுள்ளனர். இவர்களை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு தங்களது அறிக்கையில் மெய்தி இன மக்கள் தெரிவித்துள்ளனர்.