bilkis bano case: குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை

By Pothy RajFirst Published Aug 18, 2022, 9:00 AM IST
Highlights

குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்குப்பின் நடந்த வன்முறையில் பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் நீதித்துறை மீதான நம்பிக்கைபிடி தளர்ந்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்குப்பின் நடந்த வன்முறையில் பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் நீதித்துறை மீதான நம்பிக்கைபிடி தளர்ந்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. 

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உல்ளிட்ட 7 பேரையும் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைதுசெய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து பில்கிஸ் பானு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை தண்டனைக்காலம் முடியும் முன்பை குஜராத் அரசு விடுவித்துள்ளது. அவர்களை விடுவிக்கும் முன், என்னுடைய பாதுகாப்பு, நலன் குறித்து யாருமே கேட்கவில்லை. இது மிகப்பெரிய அநீதி, இது நடக்காமல் குஜராத் அரசு தவிர்க்க வேண்டும் எனக் கேட்கிறேன். நான் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான உரிமையைக் கொடுங்கள் என அரசிடம் கேட்கிறேன்.

பிரதமர் ஜி! உங்க பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது: ராகுல் காந்தி தாக்கு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், என்னை சீரழித்து, எனது குடும்பத்தினரைக் கொலை செய்து, என் குழந்தையை குழந்தையை என்னிடம் இருந்து பறித்த 11 குற்றவாளிகள் கடந்த 15ம்தேதி விடுதலை செய்யப்பட்டது எனக்கிருக்கும் மன உளைச்சலை அதிகப்படுத்தியது.

 குஜராத் அரசின் இந்த முடிவு என்னை உணர்ச்சியற்றவளாக்கிவிட்டது. நான் பேசுவதற்கு வார்த்தைகளின்றி தவிக்கிறேன், இன்னும் உணர்ச்சியற்றவளாகி இருக்கிறேன். இந்த தேசத்தில் எந்தப் பெண்ணுக்காவது இப்படி நீதிகிடைக்குமா என்று கேட்கிறேன். 

பில்கிஸ் பானு வழக்கு: பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் வார்த்தையை நம்பலாமா: காங்கிரஸ் கேள்வி

நம்முடைய தேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். நீதிபரிபாலனை மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எனக்கிருக்கும் அதிர்ச்சியுடன் வாழ மெதுவாகக் கற்றுக்கொண்டேன். ஆனால், இந்தகுற்றவாளிகள் விடுவிப்பு, என்னுடைய அமைதியை பறித்துள்ளது, நீதித்துறை மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் பிடியை தளர்த்தியுள்ளது.

என்னுடைய சோகம், வருத்தம், நம்பிக்கைக்காக போராடுவது அனைத்தும் எனக்காக மட்டும் அல்ல. நீதிமன்றத்தில் தினசரி போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானது. குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதால், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிப்பதை குஜராத்அரசு உறுதி செய்ய வேண்டும்.

பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்

நான் குஜராத் அரசிடம் மன்றாடிக்கேட்பது எனக்கு மறுபடியும் இதுபோன்ற துன்பம் வேண்டாம். அச்சமின்றி அமைதியாக வாழும் என்னுடைய உரிமையை திருப்பிக் கொடுங்கள். என்னுடைய குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

இவ்வாறு பில்கிஸ்  பானு தெரிவித்தார்.
 

click me!