தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெளதம்அதானிக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்புக்கு மாதம் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் செலவாகும். இந்த செலவுகளை அதானி குழுமமே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை: ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்த சிசிபிஏ
கெளதம் அதானிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து, அவருக்கு இந்த விஐபி பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு செய்தது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அதானிக்கு பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொண்டது. இனிமேல் சிஆர்பிஎப் படையினர் தலைமையில் இசட்பிரிவு பாதுகாப்புடன் அதானி செல்வார்.
முக்கிய வங்கிகளின் ஏடிஎம் களில் பணம் எடுக்கும் வரம்பு- கட்டணங்கள்: புதிய தகவல்கள்
ஏற்கெனவே தொழிலதிபரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தினருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு கடந்த 2013ம்ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பாதுகாப்புக்கான செலவை ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய தொழிலதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தொலைப்பேசியில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனைக்கு 8முறை தொலைப்பேசி மிரட்டல் விடுத்திருந்தார். அந்த நபரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது