குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து இன்று புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து இன்று புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி (நாளை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிப்பர்.
இதையும் படிங்க: சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் முர்முவிற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதனால் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முர்மு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 10.82 லட்சம் வாக்குகள் உள்ளன. மேலும் ஒரு எம்பிக்கு 708 வாக்குகள் உள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் குரங்கு அம்மை... சவுதி அரேபியாவில் இருந்து வந்த குழந்தைக்கு அறிகுறி!!
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்து 2019 வாக்கில் யூனியன் பிரதேசமாக மாறியது. இதைத் தொடர்ந்து அங்கு இன்னும் சட்டசபை அமையாமல் உள்ளது. இதன் காரணமாக எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறையும். தற்போது எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708 ஆக உள்ள நிலையில், இது 700 வரை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். ஆகவே ஒரு எம்.பிக்கு 700 வாக்குகள் உள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து 51 சதவிகித வாக்குகள் (கிட்டத்தட்ட 5.55 லட்சம் வாக்குகள்) பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெறும் புதிய குடியரசு தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.