ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்கள் முடிவுகளைப் சரிப்பார்க்கலாம்.
இந்தியாவில் அரசு துறையும், அரசுசாராத் துறையும் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரசு சாராத் துறையான ஐசிஎஸ்இ, நாட்டின் தனியார் கல்வி பாடசாலைகளை கட்டுப்படுத்தி மதிப்பீடு செய்து வருகிறது. இதன்கீழ், நூற்றுக்கணக்கான பள்ளிகள் இணைந்துள்ளன.இந்த சபை, ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும், உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் நடத்துகிறது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக ஐசிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !
மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று ஐசிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவை ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டது. ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cisce.org க்குச் சென்று தங்கள் முடிவுகளைப் சரிப்பார்க்கலாம்.
இணையதளம் மட்டுமின்றி, மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம். இது தவிர, ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவை கேரியர் போர்ட்டலிலும் பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நான்கு மாணவர்கள் 99.8% மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், 34 மாணவர்கள் 99.6% மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை