ஐபிஎல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடியும்,சுஷ்மிதாவும் டேட்டிங் சென்றது தான் இந்த வார வைரல் டாபிக்.
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே சமயம், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.இந்நிலையில் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருக்கிறேன். சுஷ்மிதா சென்னுடன் சென்றிருந்தேன். புதிய வாழ்க்கை புதிய பயணம். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்.
இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானது. அவர் வெளியிட்டிருந்த அந்த ட்வீட்டில் அவர் மென்ஷன் செய்திருந்தது சுஷ்மிதா சென்னின் ட்விட்டர் ஹேண்டில் இல்லை. மாறாக போலி ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார் அவர்.
மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !
சுஷ்மிதா சென்னின் ட்விட்டர் ஹேண்டில் எது என்று கூடத் தெரியவில்லை. நீங்கள் எல்லாம் அவரை காதலிக்கிறீர்களா ? அட போங்கப்பா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் லலித் மோடியுடன் திருமணம் என்ற தகவல் குறித்து விளக்கமளித்திருக்கும் சுஷ்மிதா சென், ‘நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன்.
யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவுவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை