ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால், தனது 5 மாத குழந்தையின் உடலை பையில் வைத்து தந்தை ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கட்டணத்தை செலுத்த முடியாமல் தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடலை பையில் வைத்து 200 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. சிலிகுரி மாவட்டம் கலியகஞ்ச் என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 200 கிலோமீட்டர் தூரம் தனது ஐந்து மாத குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்துக்கொண்டு பொதுப் பேருந்தில் பயணம் செய்ததாக உயிரிழந்த குழந்தையின் தந்தை ஆஷிம் தேப்சர்மா கூறியுள்ளார்.
ஆஷிம் தேப்சர்மா இதுகுறித்து பேசிய போது, “ சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த எனது ஐந்து மாத மகன் நேற்று இரவு இறந்தார், அதற்கு நான் ரூ. 16,000 செலவு செய்தேன். எனது குழந்தையை எனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக அங்குள்ள ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட ரூ.8,000 கொடுக்க என்னிடம் பணம் இல்லை.
இதையும் படிங்க : கோவை விமானத்தில் நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம்.. இதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?
சக பயணிகளுக்கு இது தெரியவந்தால், தன்னை இறக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், யாருக்கும் தெரியாமல் உடலை ஒரு பையில் போட்டுவிட்டு உள்ளூர் பேருந்தில் பயணம் செய்தேன்.” என்று தெரிவித்தார்.
ஆஷிம் தேப்ஷர்மாவின் இரட்டைக் குழந்தைகள் இருவரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, முதலில் கலியாகஞ்ச் மாநில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததால், ஆஷிம் தேப்ஷர்மாவின் மனைவி வியாழக்கிழமை ஒரு குழந்தையுடன் வீடு திரும்பினார். எனினும், மற்ற குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தது. பின்னர், ஆஷிம் தேப்ஷர்மா தனது இறந்த மகனின் உடலை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினார்.
ஆனால், தனது மகனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரூ.8,000 கேட்டுள்ளனர். வேறு வழியின்றி, தேவசர்மா வங்காளத்தின் சிலிகுரியில் இருந்து ராய்கஞ்சிற்கு தனியார் பேருந்தில் ஏறி, மற்றொரு பேருந்தில் தனது சொந்த ஊரான கலியகஞ்ச் சென்றடைந்தார்.
மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர், சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, சுகாதார வசதிகளின் மோசமான நிலைக்கு மாநில அரசைக் குற்றம் சாட்டினார். மறுபுறம், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : சுட்டெரிக்க தொடங்கிய கத்திரி வெயில்.! அடுத்த 5 நாட்களுக்கு பொதுமக்களே உஷார்.? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்