வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அவரது ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஸ்வீடன் நாட்டில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பால் ஜான்சனுடன் இருக்கும் ஸ்டைலான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூலாக கண்ணாடி அணிந்து போஸ் கொடுக்கும் இந்தப் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் அனைவரையும் கவர்ந்த இந்தப் படம் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் ஜெய்சங்கரின் படத்தைப் பார்த்து கருத்து கூறி வருகின்றனர்.
புதுச்சேரியில் தொழிலதிபருக்கு கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்!
"ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்" என அமைச்சர் ஜெயசங்கர் தன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Good to meet Defence Minister Pål Jonson of Sweden.
Useful exchange of views on regional and global security. pic.twitter.com/XxuynzE95Z
"டாம் குரூஸ் & பிராட் பிட்டிற்கு போட்டி உண்டு" என்று ஒருவர் கூறியுள்ளார். "இதுதான் உண்மையான 007 லுக்" என இன்னொரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், "மென் இன் பிளாக்" என்று கமெண்ட் செய்தார். மற்றொருவர் "கில்லர் லுக்" என்று சொல்லி இருக்கிறார்.
மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்
ஸ்வீடன் பயணம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஸ்வீடன், பெல்ஜியம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆறு நாள் பயணத்தில் அவர் ஸ்வீடன் நாட்டின் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன் ஸ்வீடனில் உள்ள இந்தியர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றிலும் பேசி இருக்கிறார்.
இதைப்பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர், ஸ்வீடனில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். மேலும், "இந்தியா சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பலதரப்புகளையும் உள்ளடக்கிய கூட்டாளியாகவும் மதிக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
Delighted to interact with the Indian Community in Sweden.
Apprised them of the progress in our bilateral relationship as we mark 75 years of diplomatic ties. Sweden is valued as a member of the EU, a Nordic partner and a fellow multilateralist.
Spoke about the… pic.twitter.com/hIDGX2hLm9
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்தும் பேசியதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநராகும் கர்நாடக டிஜிபி பிரவீன் சூத்! டி.கே. சிவகுமாருக்கு காத்திருக்கும் ஆபத்து என்ன?